தேர்தல் நடந்து முடிந்த கையோடு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் எனப் பலரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை எதிர்பார்த்த பலருக்கு அமைச்சுப் பதவியோ இராஜாங்க அமைச்சுப்பதவியோ எதுவும் கிட்டவில்லை என்ற ஆதங்கமும் பொதுவாக உள்ளது.
இவற்றுக்கு அப்பால் இந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வருவதில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களும் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளனர். குறிப்பாக யுத்தத்திற்கு பின்னர் முதற்தடவையாக சுதந்திரக் கட்சி சார்பில் யாழ்ப்பாணத்தில்போட்டியிட்ட வேட்பாளர் கூடிய விருப்பு வாக்குகளுடன் வெற்றி வாகை சூடியுள்ளார்.
இந்நிலையில் அரசாங்கம் தமிழ், சிங்கள மக்களை அரவணைத்து செல்ல வேண்டியது அவசியமாகும். எனினும் அவ்வாறான போக்கு தொடருமா என்ற சந்தேகம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலையடுத்து பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடனேயே ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் தமிழ் பேசும் மக்களை புறந்தள்ளியவாறான தோற்றப்பாடே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் கண்டியில் இலங்கைத் தேசிய கொடிக்கு பதிலாக தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலட்சனை அகற்றப்பட்ட கொடிகளே பல இடங்களிலும் பறக்க விடப்பட்டிருந்தன.
கண்டி தலதா மாளிகை வளாகத்தில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட நிலையில் இவ்வாறான கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தமை தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் மிகுந்த விசனத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இவ்வாறான கொடிகள் பறக்கவிடப்பட்டமை தொடர்பில் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பதிவுகள் இடப்பட்டு கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இதேவேளை இதற்கு நியாயம் கற்பிப்பது போன்று குறித்த கொடி கண்டி இராச்சியத்திற்குரியது எனவும் அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வு கண்டியில் இடம்பெற்றதால் இந்தக் கொடிகளை பறக்கவிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது .
இதேபோன்று கடந்த 2015ஆம் ஆண்டு தேசியக் கொடிக்குப் பதிலாக இதேபோன்ற கொடிகள் பறக்க விடப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது பௌத்த நாடு அவர்களுக்கே முதலிடம் வழங்கப்படும் என்ற தோரணையில் இவ்வாறு செயற்பட கடும்போக்காளர்கள் முனைவதாக சிறுபான்மை மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கண்டி தலதா மாளிகையின் வளாகத்தில் நாட்டின் தேசியக்கொடியை பலாத்காரமாக அகற்றிவிட்டு இதே போன்ற கொடி பௌத்த குருமாரால் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
இலங்கை ஒரு பல்லின கலாசாரங்களை கொண்ட ஜனநாயக நாடு என்பதை மறந்து செயற்படுவது ஒருபோதும் இன ஐக்கியத்துக்கும் புரிந்துணர்வுக்கும் வழிவகுக்காது என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM