கொரோனா தொற்றுக் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 50,000 இலங்கையர்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 93 நாடுகளிலிருந்து இதுவரை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையைச் சேர்ந்த புலம்பெய் தொழிலாளர்கள் நாட்டிற்கு திரும்பியுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் கொலம்பேஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக மேலும் 50, 000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு திரும்புவதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் பலர் தொழில்வாய்ப்பினை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.