பல பயணிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஷாங்காய்க்கான பல விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

அதன்படி எடிஹாட் ஏர்வேஸின் அபுதாபி-ஷாங்காய் விமானம், சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸின் மணிலா-ஷாங்காய் விமானம் மற்றும் இலங்கை ஏர்லைன்ஸின் கொழும்பு-ஷாங்காய் விமானம் ஆகியவை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சீனாவின் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, 

எட்டிஹாட் ஏயர்வேஸின் EY862 என்ற விமானத்தின் ஆறு பயணிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை ஆகஸ்ட் 03 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீனா ஈஸ்டர்ன் ஏயர்லைன்ஸின் MU212 என்ற விமானத்தில் ஆறு பயணிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை ஆகஸ்ட் 05 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை ஏர்லைன்ஸின் யுஎல் 866 விமானத்தின் 23 பயணிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை ஆகஸ்ட் 7 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் இந்த இடை நிறுத்த நடவடிக்கையில், எட்டிஹாட் ஏயர்வேஸ் மற்றும் சீனா ஈஸ்டர்ன் ஏயர்லைன்ஸின் விமான சேவைக்கான தடை உத்தரவு ஒரு வாரம் நீடிக்கும், அதே நேரத்தில் இலங்கை ஏயர்லைன்ஸின் விமான சேவைக்கான தடையுத்தரவு நான்கு வாரங்களுக்கு நீடிக்கப்படும்.