லிந்துலை - பம்பரகலை பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருப்பிடங்களை அமைக்க நடவடிக்கை - ஜீவன் தொண்டமான்  

Published By: Digital Desk 3

13 Aug, 2020 | 10:21 AM
image

லிந்துலை, பம்பரகலை நடுப்பிரிவு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக இருப்பிடங்களை அமைப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைப்பதற்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற கையோடு கண்டியிலிருந்து நுவரெலியாவுக்கு திரும்பிய ஜீவன் தொண்டமான், முதலில் தீயினால் பாதிக்கப்பட்ட லிந்துலை பம்பரகலை நடுப்பிரிவு தோட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.

அங்கு தீவிபத்தால் பாதிக்கப்பட்டுள்ள 24 குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல்கூறிய ஜீவன் தொண்டமான், தற்காலிகமாக தங்குமிட வசதிகளையும், அவர்களுக்கான உலர் உணவுகளையும் வழங்க பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாகவும், அக்கரப்பத்தனை பிரதேச சபையின் ஊடாகவும் ஏற்பாடு செய்தார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

இதன்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், உப தலைவர் பி.சக்திவேல், அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்செல்வன் ஆகியோரும் ஜீவன் தொண்டமானுடன் உடனிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07