69 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை ஒன்லைன் ஊடாக தமது தகவல்களை பதிவுசெய்துள்ளனர்

Published By: Vishnu

13 Aug, 2020 | 09:40 AM
image

பாராளுமன்ற செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்லைன் முறையினை பயன்படுத்தி இதுவரை புதிய பாராளுமன்றத்தின் 69 உறுப்பினர்கள் தங்களது விபரங்களை பதிவுசெய்துள்ளனர். 

ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் தகவல்களை ஒன்லைன் முறையில் (Online Registration System) பெற்றுக்கொள்ளும்  முறையொன்று பாராளுமன்ற செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து உறுப்பினர்களும் தமது தகவல்களை வழங்குவதற்கு பாராளுமன்றத்தின் இணையத்தளத்துக்கு பிரவேசித்து ஒன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்த முடியும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க அறிவித்தல் விடுத்துள்ளார். 

இந்த தகவல் வழங்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 தொற்றுநோய் நிலைமை காரணமாக தற்பொழுது பாராளுமன்றத்தினுள் காணப்படும் தகவல் தொழிநுட்ப முறைமைகளை பயன்படுத்தி ஒன்லைன் மூலம் தகவல்களை திரட்டுவதாகவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார். 

அதேபோன்று உறுப்பினர்களின் வசதி கருதி இந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பாராளுமன்றத்துக்கு வருகைதராமல் தேர்தல் தொகுதிகளில் இருந்தே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளமுடியும் என தம்மிக தஸநாயக்க மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் https://registration.parliament.lk எனும் இணைய பக்கத்திற்கு பிரவேசித்து உரிய கடவுச்சொல்லை பயன்படுத்தி இந்த விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும். இந்த கடவுச்சொல் தொடர்பில் அறிவுறுத்துவதற்கு பாராளுமன்ற பணியாட்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கடந்த 11 ஆம் திகதி அலரிமாளிகையில் உத்தியோகபூர்வமாகப் பணிகளைப் பொறுப்பேற்று சிறிது நேரத்தின் பின்னர் இந்த ஒன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தனது தகவல்களைப் பூரணப்படுத்தி பராளுமன்ற செயலகத்திடம் ஒப்படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தீர்ப்பு ஏனைய...

2024-12-10 15:47:00
news-image

கிளப் வசந்த படுகொலை ; 8...

2024-12-10 15:48:42
news-image

சகலருக்கும் குறைந்தபட்ச உணவுத்தேவை : உணவுக்...

2024-12-10 15:40:23
news-image

மக்கள் ஆணை எம் அனைவருக்கும் சமூகத்தின்...

2024-12-10 15:20:48
news-image

வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 40 இலட்சம்...

2024-12-10 15:11:41
news-image

பொகவந்தலாவையில் என்.சி போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2024-12-10 15:00:39
news-image

மகாவலி ஆற்றில் மிதந்த நிலையில் ஆணொருவர்...

2024-12-10 14:40:31
news-image

படுகொலை செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில்...

2024-12-10 14:54:39
news-image

சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய...

2024-12-10 14:09:22
news-image

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்...

2024-12-10 14:08:02
news-image

மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு...

2024-12-10 12:51:58
news-image

பதுளை ரயில் நிலையத்திற்கு முன்பாக முதியவர்...

2024-12-10 12:47:29