யேமனில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டின் மோசமான வானிலை காரணமாக கடந்த மூன்று வாரங்களில் அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் குறைந்தது 40 இறப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளன.

உயிர் இழந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் கிழக்கு மரிப் நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, சனா மாகாணத்தில் வெள்ளம் 134 பேர் உயிரிழந்திருந்ததுடன், 124 பேர் காயமடைந்திருந்தாகவும் ஹூதிஸ் அறிவித்திருந்தது.

இந் நிலையில் யேமனின் பல மாகாணங்களைத் தாக்கிய பலத்த வெள்ளத்தால் கடந்த சில வாரங்களில் டஜன் கணக்கானோரம் உயிரிழந்துள்ளனர்.

ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சனாவைக் கைப்பற்றி, ஜனாதிபதி அப்த்ரபு மன்சூர் ஹாடியை நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியதை அடுத்து, 2015 மார்ச் மாதம் அதிகரித்த மோதலால் யேமன் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது.

இந்த மோதலால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 3.65 மில்லியன் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா கூறியுள்ளது.