புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ள கொவிட் 19 பரிசோதனை அறிக்கையில் அடங்கியிருக்க வேண்டிய விடயங்கள்.

கொவிட் 19 தொற்று காரணமாக சைப்பிரஸ் நாட்டுக்கு தொழிலுக்காக செல்லும் தொழிலாளர்கள் அந் நாட்டுக்கு செல்வதற்கு முன்னர் கொவிட் 19 தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தலுக்கான ஆவணத்தைப் பெறவேண்டும்.

அந்த பரிசோதனை அறிக்கையில் அவசியம் இடம்பெறவேண்டிய வியடங்கள் குறித்து சைப்பிரஸ் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவை பின்வருமாறு:

01. மாதிரியைப் பெற்றுக்கொண்ட தினம்

02. பிரசோதனை அறிக்கைக்கான நடைமுறை (RT – PCR என்பதாக அமைந்திருக்க வேண்டும்)

03. விண்ணப்பதாரரின் பெயர்

04. பரிசோதனையின் பெறுபேறு

RT – PCR பரிசோதனைக்கு மேலதிகமாக கொவிட் 19 தொற்று இருப்பதை கண்டறிவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஏனைய வழிமுறைகளான நோய் எதிர்ப்பு மற்றும் உடற்காப்பு Antibody / Antigen  செல்லுபடியற்றதாகும்.

மேலே குறிப்பிட்ட தகவல்கள் அல்லாத பரிசோதனை அறிக்கை சைப்ரஸ் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதினால் வெளிநாட்டவர்களுக்கு அந்நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் சைப்ரஸில் உள்ள இலங்கை கொன்சல் ஜெனரல் அலுவலம் அறிவித்திருப்பதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- அரசாங்க தகவல் திணைக்களம்