பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஐ.சி.சி விதிமுறைகளை மீறியமைக்காக வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

குறித்த போட்டியில், பாகிஸ்தானின்  2ஆவது இன்னிங்ஸில் 46 ஆவது ஓவரில் யாசிர் ஷாலை வீழ்த்திய பிறகு அவரிடம் தகாத வார்த்தைகளைக் கூறியதற்காக பிராட்டுக்கு ஆட்ட நடுவரான அவரது தந்தை கிறிஸ் பிராட்டின்  அவரது சம்பளத்திலிருந்து 15% அபராதம் விதித்துள்ளார். இது அவரது சம்பளத்தின் £ 2,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  இதன் மூலம் ஐ.சி.சி விதிமுறைகளை மீறியமைக்காக கடந்த 24 மாதங்களில் மூன்று அபராத புள்ளிகளை இவர் பெற்றுள்ளார்.

இதே வேளை டெஸ்ட் கிரிகெட்போட்டியில், தந்தை மகனுக்கு அபராதம் விதித்த முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.