இரவில் உறக்கமின்மைக்கும், ஒவ்வாமை மற்றும் ஓஸ்துமாவிற்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும் அதிலும் குறிப்பாக பதின்ம வயதுடைய பெண்களுக்கு இத்தகைய தொடர்பு அதிகமிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

வளரிளம் பருவத்தில் உள்ள ஆண்களும், பெண்களும், தங்களின் கைகளில் எப்போதும் இலத்திரனியல் சாதனங்களுடனேயே இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் சமூக வலைதள பக்கங்களில் தங்களுடைய கவனத்தை செலுத்தி, நேரத்தை வீணடிக்கிறார்கள். 

Silver Star – Obesity linked to poor sleeping habits

இதன் காரணமாக அவர்கள் உடலியல் இயக்க சுற்றுக்கு ஏற்ற வகையில், சரியான நேரங்களில் உறங்கச் செல்லாமல், தாமதமாக உறங்கி, காலையில் தாமதமாக படுக்கையிலிருந்து எழுகிறார்கள். இதன் கரணமாகவே இவர்கள், நாளடைவில் ஒவ்வாமை மற்றும் ஓஸ்துமா பாதிப்பிற்கு ஆளாகுவதற்கான வாய்ப்புகள் 60% வரை அதிகரித்திருப்பதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

இத்தகைய ஆய்வின் போது, அவர்களுடைய மெலடோனின் சுரப்பி, இரவு பத்து மணியிலிருந்து சுரக்க தொடங்கும். மெலட்டோனின் என்னும் சிறப்பு சுரப்பியின் பணிகளில் இவர்கள் இடையூறு செய்வதால் ஒவ்வாமை மற்றும் ஓஸ்துமா தொடர்பான பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவ அறிஞர்கள் கண்டறிந்து விவரிக்கிறார்கள்.

அத்துடன் இவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் சுவாச மண்டல பாதிப்புகள் அதிகம் இருப்பதாலும், இவர்கள் ஒவ்வாமை மற்றும் ஓஸ்துமாவை பாதிப்பிற்குரிய காரணிகளைத் தூண்டுவதால், இவர்கள் மேற்கண்ட பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். 

எனவே இவர்கள் தங்களது உறக்க சுழற்சியை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக இலத்திரனியல் சாதனங்களின் தொடர்புகளை தற்காலிகமாக துண்டித்து வைக்க வேண்டும் . 

இவைகளை தொடர்ச்சியாக செய்யும் பொழுது இவர்கள் ஒவ்வாமை மற்றும் ஓஸ்துமா பாதிப்பிற்கு ஆளாகாமல், தங்களது சுவாச மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தை இயல்பான நிலையில் பராமரிப்பார்கள்.

-டொக்டர் ஆர் பி செந்தில்குமார்