புதிய அரசாங்கத்தில் மைத்திரிபால உள்ளிட்ட பலருக்கும் ஏமாற்றம்

Published By: J.G.Stephan

12 Aug, 2020 | 04:32 PM
image

 (இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதியும், சுதந்திர கட்சியின் தலைவருமான  மைத்திரிபால சிறிசேன,  பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், அஎஸ். பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா, சுசில் பிரேமஜயந்த, விஜயதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு அமைச்சு பதவிகளோ, இராஜாங்க அமைச்சு பதவிகளோ வழங்கப்படவில்லை.

 9வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிவேனவை நியமிக்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அரசாங்க தரப்பு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து அபிவிருத்தி அமைச்சு பதவியை அவருக்கு வழங்குவதாக வாக்குறுதி  வழங்கியுள்ளதாக சுதந்திர கட்சியின் தலைவவர் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்றும் நிகழ்வு இன்று தலதா மாளிகையின் வளாகத்தில் இடம்பெற்றது.

அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள் மற்றும் 24 மாவட்ட  அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுதலைவர் பதவி ஆகியவற்றுக்கான  நியமண பத்திரங்கள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன. மாவட்ட அபிவிருத்தி தலைவர் பதவி புதிதாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட புதுமுகங்கள்.  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள். மற்றும் அமைச்சர் பதவி வகித்தவர்களுக்கு வழங்கப்பட்டன.

  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அமைச்சரவை அந்தஸ்த்துமிக்க அமைச்சு பதவி வழங்கப்படும் என  எதிர்பார்க்கப்பட்டது. 9வது பாராளுமன்றத்தின் சபாநாயர் பதவியை  சுதந்திர கட்சியின் தலைவருக்கு  வழங்குமாறு ஆளும் தரப்பினர்     கோரிக்கை விடுத்தனர். மாகாவலி அபிவிருத்தி அமைச்சு பதவியை அவருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சுபதவியோ, இராஜாங்க  அமைச்சு பதவியோ, ஏன் மாவட்ட அபிவிருத்தி தலைவர் பதவி  கூட வழங்கப்படவில்லை. ஆனால் அவர் பொலன்னறுவை மாவட்டத்தில் விருப்பு வாக்கு பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.

 கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு விருப்பு வாக்கு பட்டியலில் 4வது இடம்வகித்த முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு  அமைச்சு பதவியோ, இராஜாங்க அமைச்சர் பதவியோ வழங்கப்படவில்லை. ஆனால் கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் விருப்பு வாக்குப்பட்டியலில் இடம் வகித்தவர்களுக்கு  அமைச்சு மற்றும்  இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் கடந்த இடைக்கால அரசாங்கத்தில் காணி அமைச்சு பதவி வகித்த எஸ்.பி. திஸாநாயக்கவுக்கும்,  சர்வதேச உறவுகள்  இராஜாங்க  அமைச்சர் பதவி வகித்த சுசில் பிரேமஜயந்தவுக்கும் எவ்வித  அமைச்சு பதவியோ, இராஜாங்க   அமைச்சு பதவிகளோ புதிய அரசாங்கத்தில் வழங்கப்படவில்லை  பாராளுமன்ற த்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள டிலான் பெரேராவிற்கு எவ்வித    பதவிகளும் வழங்கப்படவில்லை. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளஅங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் ஆகியோருக்கு அமைச்சுபதவியோ, இராஜாங்க அமைச்சு பதவியோ வழங்கப்படவில்லை. இவ்விருவருக்கும்  மாவட்ட அபிவிருத்தி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகித்த   ஜோன் செனவிரத்ன,    மஹிந்தயாப்பா அபேவர்தன,    மஹிந்த சமரசிங்க, அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோருக்கும் புதிய  அரசாங்கத்தில் எவ்வித   பதவிகளும் வழங்கப்படவில்லை.     9வது  பாராளுமன்றத்தின் சபாநாயகராக    மஹிந்த   யாப்பா  அபேவர்தனவை   நியமிக்கும் யோசனை       முன்வைக்கப்பட்டுள்ளது.

  ஸ்ரீ லங்கா   பொதுஜன   பெரமுனவின் தேசிய  பட்டியலில்   பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள  ஜி. எல். பீறிஷூக்கு  கல்வி அமைச்சு பதிவியும், அலி சப்ரிக்கு   நீதியமைச்சு பதவியும்,     திறன்கள் மற்றும் தொழினுட்ப விருத்தி  இராஜாங்க அமைச்சு பதவி  சீதா அரம்பேபொலவிற்கும்,   நிதி  சந்தைப்படுத்தல் அரச தொழிற்துறை   அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு பதவி    அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27