முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ சில தினங்­களில் தென்­கொ­ரியா­விற்கு விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. இதற்­கான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வருவதாகவும் தென்கொரியாவில் வசிக்கின்ற இலங்கையர்களை சந்திப்பதற்கு இதன்­போது நட­வ­டிக்கை எடுக்­கப்­படுமென்றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பொது எதி­ரணி புதிய கட்­சி­யொன்றை ஆரம்­பிக்­கப்­போ­வ­தாக தெரிவிக்கப்பட்டு வரு­கின்ற நிலை­யிலும் நிழல் அமைச்­ச­ரவை அமைக்­கப்­பட்­டுள்ள சூழ­லிலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தென்­கொ­ரி­யா­விற்கு விஜயம் செய்­ய­வுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவி இழந்த பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­­பக் ஷ தாய்­லாந்து, உகண்டா, மற்றும் ஜப்பான் ஆகிய நாடு­க­ளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். தற்போது அவர் தென்கொரியாவிற்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.