புறக்கோட்டை, பெத்தேகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணிடம் இருந்து சுமார் 7 மில்லியன் ரூபா பணம் மற்றும் 800 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீகஹவத்த பொலிஸ் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் ஹெரோயின் போதைப்பொருள் பொதி செய்துகொண்டிருக்கும் போதே  சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.