முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பெருமையடைவதாக டுவிட்டரில் பதிவொன்றை செய்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவர்  ஆகியோருக்கான  நியமனங்கள்  வழங்கும் நிகழ்வு வரலாற்று  சிறப்பு  மிக்க  கண்டி  தலதா மாளிகையில்  மகுல் மலுவ  வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

2020 பொதுத்தேர்தலில் அம்பாந்தோட்டை  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிட்டு 166,660 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

இதுதொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது,

அந்தஸ்து உள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டதில் நான் பெருமையடைகிறேன். என் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதுடன், எனது நாட்டுக்கு என்னால் முடிந்த சேவை செய்ய எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.