நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டின் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 2,638 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது  2,880 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம் 231 கொரோனா தொற்று நோயாளர்கள் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருதுடன்,  சந்தேகத்தின் அடிப்படையில் 49 நபர்களும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.