கூகுள் ஸ்மார்ட்போன்களை நிலநடுக்கத்தை கண்டுப்பிடிக்கும் கருவியாக மாற்றுகிறது.

அதாவது  ஆல்பபெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான கூகுள் அண்ட்ரோய்ட் ஸ்மார்ட்போன்களில் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் உலகெங்கிலும் நிலநடுக்கங்களை கண்டறியத் தொடங்கியது.

இந்நிலையில், பில்லியன் கணக்கான பயனர்களுக்கு அருகிலுள்ள நிலநடுக்கம் பற்றிய "ஷேக்அலர்ட்"  எச்சரிக்கையை வழங்கிகுகிறது. 

 இது  முதலில் கலிபோர்னியாவில் பயன்பாட்டிற்கு வெளிவருகிறது.

ஜப்பான், மெக்ஸிகோ மற்றும் கலிபோர்னியா போன்ற நாடுகளில் நிலநடுக்க எச்சரிக்கைகளை தெரிந்து கொள்ள  நில அளவை சென்சார்களைப் பயன்படுத்துகின்றன.

இது நிலநடுக்கம் தொடங்குவதற்கு முன்பு தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நிலநடுக்க விநாடிகளின் மையப்பகுதியிலிருந்து மக்களை விலக்கி வைப்பதன் மூலம் காயங்கள் மற்றும் சொத்து சேதங்களை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கண்டறிதல் மற்றும் எச்சரிக்கை செய்வதற்கான கூகுளின் அணுகுமுறைகள் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டால், எச்சரிக்கைகள் முதன்முறையாக இந்தோனேசியா மற்றும் சில பாரம்பரிய சென்சார்களைக் கொண்ட பிற வளரும் நாடுகள் உட்பட பலரைச் சென்றடையும்.

சில டேப்லெட்டுகள் (tablets) உட்பட 2.5 பில்லியனுக்கும் அதிகமான சாதனங்கள் கூகுளின் அண்ட்ரோய்ட் இயக்க முறைமையை இயக்குகின்றன.