தனுஷ் நடித்து வரும் பொலிவுட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை டிம்பிள் ஹயாதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
'ஜகமே மந்திரம்' , 'கர்ணன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் பொலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தயாராகி வரும் ' அத்ரங்கி ரே ' என்ற படத்தில் நடித்துவருகிறார்.
இந்த படத்தில் பொலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய்குமார், இளம் நடிகையும், நட்சத்திர வாரிசு நடிகையுமான சாரா அலி கான் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை டிம்பிள் ஹயாதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் இயக்குனர்
ஏ எல் விஜய் இயக்கத்தில், பிரபுதேவா தமன்னா நடித்த 'தேவி 2 ' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருக்கிறார்.
நடிகர் தனுஷ் தமிழ் படங்களில் நடிப்பதுடன் 'ரான்ஜானா', 'ஷமிதாப்' என இரண்டு ஹிந்திப்படங்களில் ஏற்கனவே நடித்திருக்கிறார். அவர் நடிக்கவிருக்கும் மூன்றாவது ஹிந்தி படமான 'அத்ரங்கி ரே' படத்தின் படப்பிடிப்பு பொது முடக்கம் நீக்கப்பட்ட பிறகு ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் மதுரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஹீமான்ஸு ஷர்மா திரைக்கதை எழுதியிருக்கும் இந்தப் படத்துக்கு, ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM