ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சர்களின் பதவிப் பிரணமான நிகழ்வு சற்று முன்னர் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி முன்னிலையில் ஆரம்பமானது.
இதன்போது இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் நியமனம் பெற்றனர்.
அவர்களின் முழு விபரம்:
*உள்நாட்டலுவல்கள், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ நியமனம்
*சர்வதேச தொழில் ஊக்கப்படுத்தல் மற்றும் தொழிற் சந்தைப்படுத்தல் இராஜாங்க அமைச்சராக பியங்கர ஜயவரத்தன
*தேசிய ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சராக தயாசிறி ஜயசேகர
*சூரிய சக்தி, காற்று மற்றும் நீர்மின் உற்பத்தி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக துமிந்த திஸாநாயக்க
*கூட்டுறவு சேவை சந்தைப்படுத்தல் முதலீட்டாளர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக லசந்த அழகியவண்ண நியமனம்
*சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷினி பெர்னாண்டோ நியமனம்
*தெங்கு உற்பத்தி மற்றும் பனை மற்றும் கிதுல் ஊக்குவிப்பு, அதன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சராக அருந்திக பெர்னாண்டோ நியமனம்
*கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக நிமலான்சா நியமனம்
*கப்பல்துறை கட்டமைப்பு வசதிகள், கப்பற்துறை விநியோக அபிவிருத்தி, படகு நவீனப்படுத்தல் இராஜாங்க அமைச்சராக ஜயந்த சமரவீர நியமனம்
*காணி அபிவிருத்தி,அரச காணிமுகாமைத்துவம், சொத்து அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க நியமனம்
*தோட்டக் காணி அபிவிருத்தி,தேயிலை தொழிற்துறை நவீனப்படுத்தல், ஏற்றுமதி முன்னேற்றம், சிறு ஏற்றுமதி உற்பத்திகள் மேம்பாடு, உபரி பயிர்ச்செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக கனக ஹேராத்
*தேசிய மரபுரிமைகள் மற்றும் கலை கலாச்சார இராஜாங்க அமைச்சராக விதுர விக்கிரமநாயக்க நியமனம்
*கரும்பு,சோளம்,மரமுந்திரிகை,வெற்றிலை,கராம்பு சிறுதோட்ட பயிர்ச் செய்கை மற்றும் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சராக ஜானக வக்கும்புர நியமனம்
*பௌத்த மத சார் கல்வி, பிரிவெனா, மற்றும் பௌத்த பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சராக விஜித பேருகொட நியமனம்
*சமுர்த்தி,வீட்டு வர்த்தகம், நுண்கடன் சுய தொழில் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக செஹான் சேமசிங்க நியமனம்
*உர உற்பத்தி விவசாயம் தொடர்பான தொழினுட்ப விருத்தி இராஜாங்க அமைச்சு, கிருமிநாசினி உற்பத்தி,விநியோக இராஜாங்க அமைச்சராக மொஹான் டி சில்வா நியமனம்
*மாணிக்கம், தங்க ஆபரண உற்பத்தி, கனிய வளங்கள் இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமனம்
*வாகன கண்காணிப்பு,பேருந்து போக்குவரத்து,புகையிரத பெட்டிகள், மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகம நியமனம்
*வனஜீவராசிகள் மற்றும் யானை வேலி,வனமீள் புத்தாக்கம் தொடர்பான இராஜாங்க அமைச்சராக விமலவீர திசாநாயக்க
*வலய நல்லுறவு விவகார இராஜாங்க அமைச்சராக தாரக பாலசூரிய நியமனம்
*கிராமிய வீடமைப்பு, நிர்மானத்துறை மற்றும் கட்டடத்துறை இராஜாங்க அமைச்சராக இந்திக அனுருத்த நியமனம்
*மீன்பிடித்துறை,நன்னீர் மீன்பிடி தொழில், மீன்பிடி துறைமுக அபிவிருத்தி, கடற்சார் வள ஏற்றுமதி இராஜாங்க அமைச்சராக காஞ்சன விஜேசேகர நியமனம்
*கிராமிய மற்றும் நகர நீர்வழங்கல் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சனத் நிஷாந்த நியமனம்
*மகாவலி வலயத்துக்குட்பட்ட குள அபிவிருத்தி, கிராமிய விவசாய அபிவிருத்திக்கான நீர்ப்பாசன விநியோக இராஜாங்க அமைச்சராக சிறிபால கம்லத் நியமனம்
*மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக சரத் வீரசேகர நியமனம்
*கிராமிய வயல் நிலங்களை அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சராக அனுராத ஜயரத்ன நியமனம்
*தபால் சேவைகள், வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் நியமனம்
*கிராமிய மற்றும் பாடசாலை மட்ட விளையாட்டுத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக தேனுக விதானகமகே நியமனம்
*தேசிய மருத்துவம் முன்னேற்றம் கிராமிய, ஆயுர்வேத அபிவிருத்தி, சமூக நலன்புரி சுகாதார இராஜாங்க அமைச்சராக சிசிர ஜயகொடி நியமனம்
*பெண்கள்,சிறுவர் அபிவிருத்தி, ஆரம்ப கல்வி மேம்பாடு, பாடசாலை உட்கட்டமைப்பு, கல்வி சேவை,கல்வி மறுசீரமைப்பு,இராஜாங்க அமைச்சராக பியல் நிஹாந்த நியமனம்
*பிரம்புகள், பித்தளை, மர உற்பத்திகள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாடு இராஜாங்க அமைச்சராக பிரசன்ன ரணதுங்க நியமனம்
*விமான சேவைகள், ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ரி.வி. சாணக்க நியமனம்
*கால்நடை வளங்கள், பண்ணை உற்பத்தி மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக டீ.பி ஹேராத் நியமனம்
*நெல் மற்றும் தானிய உற்பத்தி,சிறு ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி மேம்பாடு சேதன உணவு, மரக்கறி, பழங்கள் விவசாய தொழில் நுட்ப இராஜாங்க அமைச்சராக சஷிந்திர ராஜபக்ஷ நியமனம்
*நகர அபிவிருத்தி மற்றும் கரையோர பாதுகாப்பு கழிவகற்றல், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக நாலக கொடஹேவா நியமனம்
*தோட்ட வீடமைப்பு சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமான் நியமனம்
*நிதி மற்றும் முதலீட்டு வர்த்தகம் மற்றும் அரச தொழில் முயற்சி கொள்கை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக அஜித் நிவாட் கப்ரால் நியமனம்
*திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல நியமனம்
*மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் கண்காணிப்பு இராஜாங்க அமைச்சராக சன்ன ஜயசுமன நியமனம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM