மஸ்கெலியா, பெரிய மஸ்கெலியா தோட்டத்தில் காதல் தோல்வியால் மனவிரக்தி அடைந்த 24 வயதுடைய இளைஞன் நேற்று காலை 10.00 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவிடயமாக அவரது தந்தை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்த பின்னர், சம்பவ இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரையில் உதவி அதிகாரி  தலைமையிலான பொலிசார், திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் சென்று   இல்லத்தில்  தூக்கிட்டு கொண்டதை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.