உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு ரணில் விக்ரமசிங்க, ருவான் விஜயவர்தன மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு, விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனைவை ஆகஸ்ட் 18 ஆம் திகதியும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மற்றும் முன்னாள் சட்டம், ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்னாயக்கவை ஆகஸ்ட் 21 ஆம் திகதியும் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை கடந்த மார்ச் 20 ஆம் திகதியன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.