யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்  த.சத்தியமூர்த்தி   யாழ் சிறைச்சாலை அத்தியட்சகரின் அழைப்பில் வைத்தியர்கள் சிலருடன் சிறைச்சாலைக்கு  விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி தற்போது யாழ்ப்பாண சிறைச்சாலையில் புனர்வாழ்வு பெற்று வரும் கைதிகளுடன்  கலந்துரையாடிய பணிப்பாளர்

சிறைச்சாலையில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தியமைக்காகவும் தற்போது சிறைச்சாலையில்  முன்னெடுப்படும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்தோடு.

சிறைச்சாலையிலிருந்து குறித்த கைதிகள் விடுதலை செய்யப்பட்ட பின் மீண்டும் போதைப்பொருட்களை பயன்படுத்தாமல் அவர்களை கண்காணிக்கும் பொறிமுறைமை யொன்றை உருவாக்கி சமூகத்தில் அவர்களை பெறுமதியானவர்களாக மாற்றி எதிர்காலத்தில் போதைப்பொருள் பாவனையற்ற நாட்டை உருவாக்குவதற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

குறித்த சந்திப்பில்  யாழ்ப்பாண சிறைச்சாலையின் பிரதம சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் சிறைச்சாலை ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தனர்