நடிகை சமந்தாவும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து வருவது தெரிந்ததே. இருவரும் ஒரேவீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் வசித்து வருகிறார்கள். இவை செய்தியாக வெளியானவுடன் இருவீட்டார்களும் பேச்சு வார்த்தையை நடத்தி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இந்நிலையில் சமந்தாவின் ஜாதகத்தில் திருமண தோஷம் இருப்பதாக நாகார்ஜுனா குடும்பத்திற்கு நெருக்கமான சில ஆஸ்தான சோதிடர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதனால் இவ்விருவர்களும் தற்போது தோஷ பரிகாரத்திற்காக காளஹஸ்தி என்ற ஆலயத்திற்கு செல்லவிருக்கிறார்களாம். இதனிடையே நடிகை சமந்தா தன்னுடைய முன்னாள் காதலரான நடிகர் சித்தார்த்துடன் இதே ஆலயத்திற்கு வருகைத்தந்து தோஷ பரிகார பூஜையில் பங்குபற்றியிருக்கிறாராம். அத்துடன் நடிகை ஐஸ்வர்யாராய்க்கும் இதே போன்றதொரு தோஷம் இருந்ததாகவும், அவரும் தோஷ பரிகாரம் செய்து கொண்டபின்னரே அபிசேக் பச்சனை கரம் பிடித்தாராம்.

நடிகை சமந்தா இதுகுறித்து கருத்து ஏதும் கூற மறுப்பு தெரிவித்துவிட்டார்.

தகவல் : சென்னை அலுவலகம்