கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டுக்கு திரும்ப முடியாது சிக்கித் தவித்த மேலும் 120 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

டோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூ.ஆர் -668 என்ற விமானத்தில் 13 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.45 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அதுபோல லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து 107 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் 

மேலும், இங்கிலாந்தில் தங்கியுள்ள 107 இலங்கையர்களை யுஎல் -504 என்ற விமானம் மூலம் அதிகாலை 5.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர்.சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.