சுமார்  2 கோடி 48 லட்சம் ரூபா மதிப்புள்ள 4960 போதை மாத்திரைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின்  சுங்கப்பிரிவினரால் (11) நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.

ஒரு அட்டை பெட்டியில் மறைத்து விமானத்தின் மூலம் இவ் போதை மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தப்பட்டுள்ளது. 

நெதர்லாந்திலிருந்து கொழும்பு 15 பகுதியில் உள்ள ஒரு முகவரிக்கு இவ் பெட்டி அனுப்பப்பட்டுள்ளபோதிலும், இதுவரை பொதியை எடுத்துச்செல்ல யாரும் முன்வரவில்லை என சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த பெட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியைக் கண்டுபிடிக்க முடியாததால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.       

எக்டஸி எனப்படும் இவ் போதை மாத்திரைகள் , நகரங்களில் உள்ள இளைஞர்களுக்கு  மிக அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.     

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை போலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு முன்னெடுத்துள்ளது.