லங்கா பிரீமியர் லீக்  போட்டி பிட்போடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை அதன் உத்தியோக பூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஏற்கனவே 2020 ஒகஸ்ட் 28 ஆம் திகதி முதல் 2020 செப்டம்பர்  20ஆம் திகதி வரை நடைபெற தீர்மானிக்கப்பட்டிருந்த  லங்கா பிரீமியர் லீக் 2020 நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. 

சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் சுகாதார வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு  இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.