இன்றைய திகதிகளில் எம்மில் பலரும் கணினிகளையும், கைப்பேசிகளையும் தொடர்ந்து கண்களுக்கு அருகே வைத்துக்கொண்டு கால அவகாச அளவுகோல் ஏதுமின்றி, பார்வையிட்டுக் கொண்டே இருக்கிறோம். இதன் காரணமாக வறண்ட கண் உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்நிலையில் மிகச் சிலருக்கு கைஸர் ஃப்ளீசர் வளைய பாதிப்பு ( Kayser =Fleischer Ring ) என்ற பாதிப்பு கண்களில் ஏற்படுகிறது. 

அதாவது கண்களின் உள்ள கார்னியா எனப்படும் பகுதிகளை சுற்றி ஒரு வளையம் போல் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதனை உரியமுறையில் மருத்துவ கண் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெறவில்லை என்றால், நாளடைவில் பார்வைத் திறன் பாதிக்கப்படும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

3 முதல் 55 வயதிற்குட்பட்ட நபர்களில் சிலருக்கு சீரம் அமினோடிரான்ஸ்ஃபெரேஸ் என்னும் தாது பொருளின் அளவு கண்களில் உயர்ந்து இருப்பதாலும், ஹெப்படைட்டிஸ் பாதிப்பு ஏற்பட்டு அதனை அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலும், கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் விவரிக்கிறார்கள்.

இத்தகைய பாதிப்பை ஆண்டுதோறும் வழக்கமாக கண் பரிசோதனை மேற்கொள்ளும் போது தெரியவரும். அதேபோல் இரட்டையர்களாக பிறக்கும் குழந்தைகளில் ஒருவருக்கு இத்தகைய பாதிப்பு வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். வேறு சிலருக்கு விவரிக்க இயலாத நரம்பியல் குறைபாடுகள் காரணமாகவும், கல்லீரலில் ஏற்படும் கோளாறுகளின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் விவரிக்கிறார்கள்.

இவர்களுக்கு தற்போது கண்டறியப்பட்டு இருக்கும் நவீன மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்போது கண் பகுதியில் சேகரிக்கப்பட்டு இருக்கும் தாமிர சத்துகள் கரைக்கப்பட்டு, சிறுநீர் மூலமாக வெளியேற்றப்படுகிறது. சிலருக்கு இதற்கான சிகிச்சை ஓராண்டு அல்லது ஆயுள் முழுவதும் எடுக்க வேண்டியதிருக்கும். இத்தகைய சிகிச்சை தொடரும்போது நோயாளிகள் செப்பு பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும் தற்போது இதனை குணப்படுத்த செலேஷன் தெரபி என்ற புதிய சிகிச்சையும் அறிமுகமாகியிருக்கிறது. இந்த சிகிச்சையை தொடர்ச்சியாக மேற்கொண்டால் 80 சதவீத நோயாளிகளுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இந்த வளைய பாதிப்பு குணமாகிவிடும். இருப்பினும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனையை பின்பற்றி, முறையான கண் பரிசோதனை மற்றும் உணவு முறையை பின்பற்ற வேண்டும்.

டொக்டர் பிரசாந்த்.

தொகுப்பு அனுஷா.