இசையமைப்பாளரும், நடிகரும், இயக்குநருமான ஹிப் பொப் ஆதி தமிழா, புதிதாக 'நான் ஒரு ஏலியன்' என்ற பெயரில் வீடியோ இசை அல்பம் ஒன்றை வெளியிடவிருக்கிறார்.

2012-ல் வெளிவந்த ஹிப் ஹொப் ஆதி தமிழாவின் ‘ஹிப்ஹொப் தமிழன்’ அல்பம் மூலம் தமிழுலகத்திற்கு ‘ஹிப்ஹொப்’ எனும் புதிய வகை இசையை அறிமுகப்படுத்தினார். இந்தியாவின் முதல் தமிழ் ஹிப்ஹொப் அல்பம் இது.

திரையிசைக்கும், பக்தியிசைக்கும் மட்டுமே வரவேற்பு இருந்த காலத்தில் வெளியான  ‘ஹிப்ஹாப் தமிழன்’  என்ற சுதந்திரமான இசை அல்பம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இளையத்தலைமுறையினரிடத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  அந்த அதிர்வு இன்றும் நீடிக்கிறது.  

தென்னிந்தியாவில் ‘ஹிப்ஹொப்’ எனும் சொல், இசையின் ஒரு வகையாகக் கொள்வதைவிட ஒரு கலைஞரை குறிக்கக் கூடியதாகவே மாறிவிட்டது. சமகாலத்தில் உலகின் மிகப்பெரும் தமிழ் றாப்பிசைக் கலைஞராக திகழ்வதற்கு மேலாக, வெற்றிகரமான நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியராகவும் ‘ஹிப்ஹொப் தமிழா’ புகழ்பெற்றுள்ளார். 

இவர் எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதியன்று திரைப்படங்கள் சாராத சுதந்திர இசையுலகில் ‘நான் ஒரு ஏலியன்’ (Naa oru Alien) என்ற அல்பத்தை வெளியிடுகிறார். இதன் மூலம் மீண்டும் ஹிப் பொப் இசையுலகில் தன்னுடைய வித்தியாசமான முயற்சியை பதிவு செய்யவிருக்கிறார்  ஹிப்பொப் ஆதி தமிழா.