(எம்.மனோசித்ரா)
ரணில் விக்கிரமசிங்க 1994 இல் ஐக்கிய தேசிய கட்சியைப் பொறுப்பேற்கும் போது 43 சதவீத வாக்கு வங்கி காணப்பட்டது. ஆனால் இன்று அதனை 2 வீதமாக வீழ்ச்சியடையச் செய்த பின்னரே அவர் பதவி விலக தீர்மானித்துள்ளார்.
இந்த தீர்மானத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னரே எடுத்திருந்தால் பொதுத் தேர்தலில் பாரியதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
எதிர்க்கட்சியாக செயற்படப் போவதால் அரசாங்கத்தை வீழ்த்துவது எமது நோக்கம் அல்ல. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை அவதானிப்பதற்கு கால அவகாசம் தேவை.
இதேவேளை அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏகாதிபத்திய ஆட்சியை முன்னெடுக்கவோ ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதற்கோ முயற்சிப்பார்களாயின் அவற்றுக்கு எதிராக போராட தயாராகவுள்ளோம்.
ஆனால் நாட்டுக்கு அத்தியாவசியமான வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படும் போது அதற்கு ஆதரவளிக்கவும் தயாராகவுள்ளோம்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி 19 ஐ நீக்குதல் , ஆணைக்குழுக்கள் மீது கைவைத்தல் , உயர் பதவிகளுக்கு தனக்கு தேவையானவர்களை நியமித்தால் அதற்கு எதிராக செயற்படவும் நாம் தயாராகவுள்ளோம். பொருளாதார மேம்பாட்டுக்கு ஒத்துழைக்கும் அதே வேளை அதனைக் காரணம் காட்டி தேசிய சொத்துக்களை விற்பனை செய்ய முயற்சிப்பார்களாயின் அதற்கு இடமளிக்கமாட்டோம்.
பொதுஜன பெரமுன ஆரம்பிக்கப்பட்டு அவர்கள் ஆட்சியைக் கைப்பற்ற சுமார் 4 ஆண்டுகள் சென்றுள்ளன. ஆனால் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் ஸ்தாபிக்கப்பட்டு சில மாதங்களில் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 54 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டமையை பெரும் வெற்றியாகக் கருதுகின்றோம்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM