சிம் அட்டையினால் செயற்படும் தொலைத்தொடர்பு உபகரணங்களை கொள்வனவு செய்தல் அல்லது ஏதாவது சேவைகளை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவால் வழங்கப்படும் அனுமதிப்பத்திர உரிமத்தை கொண்டுள்ள விற்பனையாளர்களிடமிருந்து மட்டும் பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத தொலைத்தொடர்பு உபகரணங்கள் (சிம் அட்டையினால் செயற்படும்) தொலைத்தொடர்பு வலையமைப்புடன் இணைக்கப்படுதல் விரைவில் நிறுத்தப்படும். 

தற்போது கையடக்கத் தொலைபேசி வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள மேற்படி உபகரணங்களுக்கு இது ஏற்புடையதாகாது என்றும் தெரிவித்துள்ளது.