(எம்.மனோசித்ரா)

சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

எனினும் கைதிகளை பார்வையிடுவதற்கு வாரத்திற்கு ஒருவரை மாத்திரம் அனுமதிக்க தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

கைதிகளால் பெயர் வழங்கப்படும் நெருங்கிய உறவினருக்கு மாத்திரமே அவர்களை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

அத்தோடு உணவுப்பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார பொருட்களை மாத்திரம் எடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி முதல் கைதிகளை பார்வையிடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.