அமெரிக்காவின் மேரிலன்ட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்றில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

மேரிலன்ட்டின் வட மேற்கு பால்டிமோர் பகுதியிலேயே இந்த வெடிப்பு அந் நாட்டு நேரப்படி திங்கட்கிழமை காலை ஏற்பட்டுள்ளது.

எரிவாயு வெடிப்பினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் கூறியுள்ள அதிகாரிகள், மூன்று வீடுகள் இதனால் முற்றாக சோதமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றது.