செட்டிகுளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இன்று காலை இ.போ.சாபைக்கு சொந்தமான பஸ் பூவரசன்குளம் பகுதியில் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானது. 

இதன்போது பஸ்ஸில் பயணித்த பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை ஏன்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

 இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் 

இன்று காலை செட்டிகுளம் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு சென்ற அரசு பஸ் பூவரசன்குளம் , சண்முகபுரம் பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது திடீரென்று இயந்திரக்கோளாறு ஏற்பட்டு வீதியைவிட்டு விலகியுள்ளது .  

இதன்போது வீதியோரத்தில் மேய்ந்துகொண்டிருந்த இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளது. பேருந்தில் பயணித்த பயணிகள் அதிஸ்டவசமாக எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்

இவ்விபத்து சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பூவரசன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .