தொம்பே பகுதியில் நேற்று (10.08.2020) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் மற்றும் மகள் உயிரிழந்துள்ளார்கள்.

குறித்த விபத்து மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதால் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயம் அடைந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தாய் மற்றும் மகள் தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த தாய்க்கு 42 வயதும் , மகளுக்கு 19 வயதும் ஆகும்.

இந்த சம்பவம் தொடர்பாக காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பானமேலதிக விசாரணைகளை தொம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.