கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கையை நிறைவுசெய்த மேலும் 118 நபர்கள் இன்று தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்து, அவர்களது சொந்த  இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

அதன்படி கல்கந்தை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 112 பேரும், மீயாங்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து நால்வரும், புனானை  தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து இருவரும் இவ்வாறு வெளியேற்றப்படவுள்ளனர்.

தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இதுவரை 29,757 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து வெளியேறியுள்ளனர்.

தற்போது முத்தரப்பு படைகளினால் பராமரிக்கப்பட்டு வரும் 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3,449 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.