ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் கைதிகளை பார்வையிடுவதற்கு பார்வையாளர்களை அனுமதிக்க சிறைச்சாலை திணைக்களம் முடிவுசெய்துள்ளது.

அதன்படி கடுமையான சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் நிபந்தனைகளின் கீழ், கைதிகளின் நெருங்கிய உறவினருக்கு மாத்திரமே கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு கைதியை பார்வையிடுவதற்கு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே உறவினர் அனுமதிக்கப்படுவர்.

உறவினர்கள் கைதிகளுக்கு உணவு மற்றும் பானங்களை வழங்க முடியாது, அதேநேரத்தில் சுகாதாரப் பொருட்களை மட்டும் வழங்க முடியும்.

கடந்த மாதம் வெலிக்கடைச் சிறைசாலை கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து வெலிக்கடைச் சிறைச்சாலையிலுள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு தடைசெய்யப்பட்டிருந்தது.

அதன் பின்னர் ஏனைய சிறைச்சாலைகளிலும் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி நாடளாவிய ரீதியில் கைதிகளை பார்வையிடும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.