அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப், நேற்று திங்கட்கிழமை வெள்ளை மாளிகையின் மாநாட்டு அறையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆயுதமேந்திய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து ட்ரம்ப் அங்கிருந்து உடனடியாக பாதுகாப்பு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையினை சுற்றியள்ள வேலிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்ததைத் தொடர்ந்து யாரோ ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டதும், ட்ரம்ப் 10 நிமிடங்களுக்கு பின்னர் மாநாட்டு அறைக்கு திரும்பினார்.

இதன்போது தனது உரையைத் தொடர்ந்த ட்ரம்ப், 

சட்ட அமுலாக்க அதிகாரிகளினால் வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆயுதமேந்திய நபர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.