நாட்டில் நேற்றைய தினம் 27 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,871 ஆக அதிகரித்துள்ளது.

‍சேனாபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 23 கைதிகளும், அண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வந்த நால்வரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அரசாங்க  தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 14 பேர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுமுள்ளனர். இதனால் நாட்டில் குணமடைந்த கொரோன‍ெ தொற்று நோயாளர்களின் மொத்த எண்ணிக்கையானது 2,593 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 267 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 70 நபர்களும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.