தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் - 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1564 மில்லியனாக அதிகரித்துள்ளது.

தனசிறி வித்தானகே 100,000 ரூபாவையும், ஸ்ரீயானி விஜேவர்தன 100,000 ரூபாவையும், ஜே.எச்.ஆரியசிறி 100,000 ரூபாவையும், ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன முன்பள்ளி ஆசிரியர் தொழிற்சங்கம் 6,500 ரூபாவையும், கே.ரணதுங்க 3,000 ரூபாவையும், எம்.காமினி டி.பீரிஸ் 10,000 ரூபாவையும், பி.ஏ.காந்தி 5,000 ரூபாவையும் சிறுவர்களான செனிந்து வின்சர மற்றும் தசுனி விகன்ஷா 970 ரூபாவையும் சிறுவர்களான கஜினி விக்கிரமசிங்க மற்றும் பவிந்து விக்கிரமசிங்க 1,374.25 ரூபாவையும், ஆர்.எச்.விமலரத்ன 362.75 ரூபாவையும் சிறுமி ஒமேனா செவ்வந்தி 521 ரூபாவையும் சிறுவன் மனுஜ மதிசெய கமகே 280 ரூபாவையும் சிறுவன் பவன் சமிறு நெத்துசர 1,754.50 ரூபாவையும் சிறுவன் யசந்து துறுல் 2,022.50 ரூபாவையும் சிறுமி ஹசலி விதுமினி விஜேதுங்க 626 ரூபாவையும் சிறுமி ஆர்.ஏ.தகம்தி ரெஹன்ஷா 1384 ரூபாவையும் திரு.கஹட்ட பிட்டியகே யசபால 50,000 ரூபாவையும், பி.ஆர்.ஜே.செனவிரத்ன 7500 ரூபாவையும் ஸ்ரீ சுமன சமன் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே ஜயம்பதி பண்டார ஹீங்கெந்த 100,000 ரூபாவையும், ஸ்ரீ மகா பத்தினி தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே ஹேமந்த பண்டார 500,000 ரூபாவையும், வரலாற்று சிறப்புமிக்க பஸ்கம ஸ்ரீ நாத தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே தமிந்த பண்டார உடுராவண 250,000 ரூபாவையும் அன்பளிப்பு செய்துள்ளனர். குறித்த அன்பளிப்புகள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

தபால் திணைக்களம் 1,604,260.61 ரூபாவையும் Egis International 373,600 ரூபாவையும் ஊவா மாகாணத்தில் சேவைபுரியம் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரச ஊழியர்கள் 10,298,112.68 ரூபாவையும் தங்கல்ல நகர சபை உறுப்பினர் வை.டக்ளஸ் 45,000 ரூபாவையும் தோட்ட தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களும் 969,098.53 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்தனர்.

தற்போது இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,564,200,821.95 ரூபாவாகும். உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்து வருகின்றனர். 

காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலமும் www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும். 0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.