(இராஜதுரை ஹஷான்)

 நாட்டு  மக்கள் அனைவருக்கும் வழங்கிய  வாக்குறுதிகள்  நிறைவேற்றப்படும். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ  தலைமையிலான புதிய அரசாங்கத்தில் சுபீட்சமான  எதிர்கால கொள்கைத்திட்டம் முறையாக  செயற்படுத்தப்படும்.   அரசியல் வரலாற்றில்  விருப்பு வாக்கு முறைமையில்  முதற் தடவையாக மாற்றத்தை ஏற்படுத்திய குருநாகல் வாழ்   மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  அறிக்கை  வெளியிட்டுள்ளார்.

  அவ்வறிக்கையில் மேலும்  குறிப்பிட்டுள்ளதாவது,

 இடம்பெற்று முடிந்த பொதுத்தேர்தலில் குருநாகலை மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிட்ட  எனக்கு 527364 விருப்பு  வாக்குகள்  கிடைக்கப் பெற்றுள்ளன. இலங்கை  அரசியல்  வரலாற்றில் விருப்பு  வாக்கு முறைமையில்  முதல் தடவையாக இவ்வாறானதொரு  மாற்றத்தை ஏற்படுத்திய குருநாகல்  மாவட்ட மக்கள்  என் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு    என்றும் கடன்பட்டுள்ளேன்.  இந்த வெற்றியை பெறுவதற்கு உதவி  செய்த  பொதுஜன பெரமுனவின்குருநாகல் மாவட்ட   ஒருங்கினைப்பார்கள். ஏனைய  வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும்   நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன்.

  இடம் பெற்று முடிந்த  பொதுத்தேர்தல் எமது அரசியல் வரலாற்றில் 9வது பொதுத்தேர்தல் 2015ம் ஆண்டு  அரசியல் ரீதியில்  பாரிய சவால்களையும்,  நெருக்கடிகளையும் எதிர்க் கொண்டுள்ள நிலையில் குருநாகலை மாவட்டத்தில் போட்டியிட்டேன். முதல் தடவையாக அப்பிரதேச மக்கள் என்மீது  நம்பிக்கை கொண்டு  ஆதரவு  வழங்கினார்கள்.  இம்முறை  விருப்பு வாக்குகளின் ஊடாக  ஆதரவை  பன்மடங்கு  வெளிப்படுத்தியுள்ளார்கள்.

  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கிய மக்கள் முகப்பு புத்கத்தில் அரசாங்கம் செயற்பட வேண்டிய விதம், வாக்குறுதிகள் ஆகியவை  தொடர்பில்  கருத்துக்களை பதிவேற்றம் செய்துள்ளமை கவனத்திற்குரியது. மக்கள்  எதிர்பார்க்கும் அரசியல் நிர்வாகத்தை  சிறந்த முறையில்   முன்னெடுப்போம். மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயற்படும் போது மக்களால் நிராகரிக்கப்பட வேண்டிய நிலைமை தோற்றம் பெறும்.

 மக்கள்  மத்தியில் முன்வைத்த  வாக்குறுதிகள் அனைத்தையும்  நிறைவேற்றுவோம். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் சுபீட்சமான  எதிர்கால  கொள்கை திட்டம் முழுமையாக செயற்படுத்த வேண்டும். நாட்டு மக்கள் தொடர்ந்து   எமக்கு ஆதரவு  வழங்க வேண்டும்.