நடந்து முடிந்த பொதுத் தோர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் கம்ப ஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரஞ்சன் ராமநாயக்க, 2020 பொதுத் தேர்தலுக்கான தனது மொத்த செலவினங்களை தமது உத்தியோக பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிரங்க படுத்தியுள்ளார்.
இதன் படி அவர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக மொத்தமாக 55 லட்சத்து 65ஆயிரம் ரூபாவை செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதில் தொலைக்காட்சிகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பிரசார நடவடிக்கைகளுக்கு மாத்திரம் 3325000 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை, குறித்த செலவுக்காக, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினூடாக 500000 ரூபா நிதியும், நெருங்கிய நண்பர்கள் ஊடாக 4600000 நிதியும் திரட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஒரு தோர்தலில், போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சாரச் செலவு மற்றும் தமது நிதி ஆதாரங்கள் குறித்து விரிவான சுருக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும். இது வேட்பாளர்களின் நம்பகத்தன்மையை உயர்த்தும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM