நடந்து முடிந்த 2020 தேர்தலுக்கு வாக்களிக்க வந்த மலையக இளைஞர் யுவதிகள் மற்றும் ஏனையோர் மீண்டும் அவர்கள் பணிபுரியும் மாகாணங்களுக்கு செல்வதற்கு கடந்த மூன்று தினங்களாக முறையான போக்குவரத்து வசதி இல்லாமையை  ஹட்டன் அரச பேருந்து தரிப்பிட நிலையங்களில் காணக்கூடியதாக இருந்தது.

அரசாங்கம் அரச பேருந்துகளை முறையாக இயக்குமாறு பணித்தும்,  ஹட்டன் அரச பேருந்து நிலையத்தார் பயணிக்களுக்கு முறையான சேவையை அளிக்கவில்லையென பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். 

இது விடயமாக தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் தற்போது உள்ள போக்குவரத்து அமைச்சரும் ஜனாதிதிபதியும் முன்வந்து ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் அதிகளவிலான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு பணிப்புரை வழங்குமாறு பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இது விடயமாக ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரியிடம் கேட்டபோது பேருந்துகள் இருந்தபோதும் நடத்துனர்கள் இல்லாத காரணத்தாலும் அதிகளவு சேவையில் ஈடுபடுத்த பேருந்துகள் பற்றாக்குறை நிலவி வருவதால் ஹட்டன் அரச பேருந்து நிலையத்துக்கு மேலும் புதிதாக 30 பேருந்துகளும் 50 சாரதிகளும் 50 நடத்துனர்களையும் உடன் வழங்கி மக்களின் அசௌகரியங்களை போக்க முன்வருமாறு உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கின்றனர்.