ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,  

தற்போதும் நாம் ஐக்கிய தேசிய கட்சியை விட்டுச் செல்லவில்லை. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கட்சி நூற்றுக்கு 2 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொள்ள வேண்டிய கட்சியல்ல. 

இவ்வாறான பின்னடைவை சந்திக்க கூடாது என்பதற்காகவே நாம் கட்சிக்குள்ளிருந்து போராடினோம். எனினும் அதற்கு உரிய தீர்வு கிடைக்காமையின் காரணமாகவே பிரிந்து செல்ல வேண்டியேற்பட்டது. எவ்வாறிருப்பினும் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதே எமது எதிர்பார்ப்பு. 

ஆனால் அவர்கள் எவ்வாறான தீர்மானத்தை எடுப்பார்கள் என்று எம்மால் கூற முடியாது. நாம் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. எனவே அவர்கள் மக்கள் வழங்கிய செய்தியை கவனத்தில் கொண்டு சிந்தித்து உரிய தீர்வை எடுக்க வேண்டும் என்றார்.