மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தர்மபுரம் கிராமத்தில் காணிகள் திட்டமிட்டு பொலிசாரின் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதை கண்டித்து பிரதேச வாசிகள் இன்று காலை முதல் மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதான வாயிலின் முன்னால் மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த கிராமத்திலிருந்து பஸ் வண்டி மூலம் மாவட்ட செயலகத்திற்கு வந்த கிராம வாசிகளை பொலிஸார் மாவட்ட செயலகத்தினுள் செல்லவிடாது பொலிஸார் தடுத்தபோது கதவிற்கு வெளியிலிருந்து அரசாங்க அதிபரை சந்திக்க சந்தர்ப்பம் தருமாறு கோரி போராட்டம் நடாத்தினர்.

இருப்பினும் பொலிஸார் உள்ளே செல்ல அனுமதி மறுத்தமையால் வெளியில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிசாரின் உதவியுடன் தங்களது காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதாகவும் அவற்றை தடுத்து நிறுத்துமாறு கோரியுமே இப்போராட்டம் நடாத்தப்படுவதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

பெரும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.