இங்கிலாந்தில் காட்டுத் தீ

Published By: Digital Desk 3

10 Aug, 2020 | 03:17 PM
image

இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் சோபம் காமனில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

140 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை உள்ளடக்கிய பகுதியில் காட்டுத்தீயால் வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சுமார் 100 குடியிருப்பாளர்கள் வெள்ளிக்கிழமை வெளியேற்றப்பட்டனர். அத்துடன் காற்றில் புகை கலந்துள்ளதால் குறித்த பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை சோபாம் காமனில் இருந்து ஒரு பெரிய புகை மண்டலம் எழுந்ததையடுத்த பல தீயணைப்புக் குழுவினர் அங்கு அனுப்பப்பட்டனர்.

இதையடுத்து அங்கிருந்த மக்களை சனிக்கிழமை மாலை தமது வீடுகளை விட்டு வெளியேறும்படி கூறப்பட்டது.

தீயணைப்பு பணியில் 40 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த காட்டுத் தீ வென்ட்வொர்த் கோல்ப் மைதானத்திற்கும் பரவியுள்ளது. தீ விபத்துக்குப் பின்னர் ரோஸ் லேடீஸ் சீரிஸ் கோல்ப் போட்டியின் இறுதிப் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

காட்டுத்தீ ஏற்பட்டுள்ள இடத்தை சுற்றியுள்ள பல வீதிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் மக்கள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக இப்பகுதியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். தீக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

ஆனால் தீவிர வெப்பநிலை தொடர்ந்து வருவதால், தீ மூட்டி எரித்தல் அல்லது கிராமப்புறங்களில் உணவுகளை தீயில் சுடுதல் ( BBQ ) போன்ற  தேவையற்ற தீகளை ஏற்படுத்த வேண்டாம்  என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17