கேரள நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் பலி

Published By: J.G.Stephan

10 Aug, 2020 | 11:33 AM
image

இந்தியாவின் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலை, பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, குறித்த மண்சரிவில் சிக்கிய 6 மாத பச்சிளம் குழந்தையின் உடல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் மாயமான 23 பேரை தேடும் பணி தொடர்ந்து நீடிக்கிறது. நிலச்சரிவில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலை, பெட்டிமுடி மலைக்கிராமங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இவர்கள் கயத்தாறு, சங்கரன்கோவில், ராஜபாளையம், புளியங்குடி, தென்காசி, பாஞ்சாலங்குறிச்சி பகுதிகளை சேர்ந்தவர்கள். சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினரும் அங்கு தங்கியிருந்து வேலை செய்து வந்தனர்.

பெட்டிமுடி மலையில் இருந்து சுமார் ஒன்றரைக் கிலோமீற்றர் தொலைவில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வீடுகள் இருந்தன. 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் கடந்த 7 ஆம் திகதி அதிகாலை 5 மணி அளவில் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. 

குறித்த நிலச்சரிவு சம்பவத்தில் 20 வீடுகள் சரிந்து மண்ணில் புதைந்தன.  அந்த வீடுகளில் நித்திரையில் இருந்த 78 பேர் உயிரோடு மண்ணில் மாண்டனர். அவர்களில் 3 பேர் உயிர் தப்பி வெளியே வந்து விட்டனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், பொலிசார் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 12 பேரை உயிருடன் மீட்டனர். 

மண்ணுக்குள் புதைந்து பலியான 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.  2 ஆவது நாளாக நேற்று முன்தினம் 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.  தொடர்ந்து கொட்டும் மழையில், 3 ஆவது நாளாக நேற்றும் மீட்பு பணி நடந்தது.  இதில் 16 சடலங்கள் மீட்கப்பட்டடன.  

பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கியவர்களில் 31 பேர் ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.  

மேலும் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தவர்களில் 19 பேர், மாணவர்கள் என தெரியவந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புட்டினின் யுத்தத்தை வலுப்படுத்தி அதனை நீடிக்கச்...

2024-06-18 14:36:31
news-image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு...

2024-06-18 14:20:37
news-image

வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி

2024-06-18 14:20:54
news-image

67 பேருடன் பறந்துகொண்டிருந்த அவுஸ்திரேலிய விமானத்தில்...

2024-06-18 13:15:30
news-image

பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள்...

2024-06-18 12:18:45
news-image

24 வருடங்களிற்கு பின்னர் வடகொரியாவிற்கு வரலாற்று...

2024-06-18 11:16:13
news-image

மத்திய தரைக்கடலில் இரு படகுகள் விபத்து...

2024-06-18 16:06:08
news-image

சென்னை விமான நிலையத்துக்கு 2 வாரத்தில்...

2024-06-17 16:46:58
news-image

ஜப்பானில் பரவி வரும் ஆபத்தான பற்றீரியா...

2024-06-17 16:20:17
news-image

மேற்கு வங்கம் | கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ்...

2024-06-17 14:09:25
news-image

மின்னணு இயந்திரங்கள் எல்லாம் கருப்பு பெட்டிகள்...

2024-06-17 14:04:34
news-image

மனச்சோர்வை - சலிப்பை ஏற்படுத்தும்- இடைவிடாத...

2024-06-17 12:24:32