பெய்ரூட் வெடிப்பினால் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளதாக லெபனானில் உள்ள இலங்கைத் தூதகரம் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் சிலர் தொடர்ந்தும் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நாங்கள் அவர்களை வைத்தியசாலைக்கு சென்று அணுக முடியாத நிலையுள்ளதாகவும் லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் ஷனி கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 25,000 இலங்கையர்கள் தற்போது லெபனானில் வசித்து வருகின்றனர், மேலும் இலங்கை தூதரகம் 24 மணி நேர அவசர சேவையை தொடர்ந்தும் பராமரித்து வருகிறது.

பெய்ரூட்டின் துறைமுகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தலைநகரின் பெரும் பகுதிகளை பேரழிவிற்கு உட்படுத்தி 150 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றது மற்றும் சுமார் 6,000 பேர் காயமடைந்தனர்.

2013 இல் கைப்பற்றப்பட்ட 2,750 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக லெபனான் அரசாங்கம் கடந்த வாரம் உறுதிப்படுத்தியது.