இங்கிலாந்தில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலையடுத்து உலக நாடுகளில் 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்தில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் பாடசாலைகளை திறக்குமாறு அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறுகையில்,
“ கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இங்கிலாந்தில் பாடசாலைகள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டன.
தற்போது இங்கிலாந்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் பாடசாலைகளை மூடுவது உகந்ததல்ல.
பாடசாலைகளுக்கு வரும் மாணவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பான விடயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
மாணவர்களின் கல்வி என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. எதிர்காலத்தில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும் பாடசாலைகள் மூடப்படுவது என்பது இறுதி நடவடிக்கையாக தான் இருக்கும்.
மாணவர்கள் தங்கள் கல்வியை தவறவிட்டால் நாடு பாரிய பிரச்னைகளை எதிர்கொள்ளும். எனவே கொரோனா பரவல் முற்றிலும் குறையாமல் இருந்தாலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பாடசாலைகளில் மாணவர்கள் தங்களது கல்வியை தொடர வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM