பதுளை -புவக்கொடமுல்ல கல்பில்ல பிரதேசத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீயினால்  லயன் வீடுகள்  14 சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் தொடர்ந்த குறித்த தீயினை, பதுளை மாநகர சபை தீயணைப்படை வீரர்களும், பிரதேச வாசிகளும் மற்றும்  பொலிஸார் இணைந்து தீயிணை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த தீ விபத்தினால் உயிர் இழப்புக்களை இடம்பெறவில்லை. தீ பரவியமைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.