ஐக்கிய மக்கள் சக்தி புதிய பாராளுமன்றத்திற்காக அதன் தேசிய பட்டியல் பிரதிநிதிகள் தொடர்பான இறுதி முடிவினை இன்று எட்டவுள்ளது.

அதன்படி தேசியப் பட்டியல் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கும் அதன் பங்காளிக் கட்சிகளுக்குமிடையிலான சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

எனவே இந்த சந்திப்பினைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் தொடர்பான இறுது முடிவு தேர்தல் ஆணையகத்திற்கு தெரிவிக்கப்படும்.

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக தேசிய பட்டியலில் ஏழு இடங்களை ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.