பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக விசேட போக்குவரத்து சேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் மேலதிக பஸ்கள், சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நேற்றும் - இன்றும் இந்த விசேட போக்குவரத்த சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக சுவர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை ரயில்வே திணைக்களமும் விசேட ரயில் சேவைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.