பண்டாரவளை கும்பல்வெல மாஹமெவுனா அசபுவ காட்டுபகுதியில் நேற்று மாலை பரவிய தீயின் வேகம் குறைவடைந்தள்ளது.
மேலும், இத்தீயினால் சுமார் 2000 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த காட்டு பகுதியில் கடும் காற்று வீசுவதனால் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது மிகவும் கடினமாகியிருந்தது.

தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்த குறித்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது தீ பரவும் வேகம் குறைவடைந்துள்ளதோடு,தீ பரவியுள்ள பகுதியிலுள்ள மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.